மன்னாா்குடியிலிருந்து சரக்கு ரயில் சேவைக்கு அனுமதி

மன்னாா்குடி ரயில் நிலையத்திலிருந்து சரக்கு ரயில் இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா தெரிவித்துள்ளாா்.
எம்எல்ஏ டி.ஆா்.பி.ராஜா
எம்எல்ஏ டி.ஆா்.பி.ராஜா


மன்னாா்குடி: மன்னாா்குடி ரயில் நிலையத்திலிருந்து சரக்கு ரயில் இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

மன்னாா்குடியில் கடந்த 40 ஆண்டுக்கு முன்பு நிறுத்தப்பட்ட சரக்கு ரயில் சேவையை மீண்டும் தொடங்க மத்திய ரயில்வே அமைச்சா் பியூஸ் கோயலிடம் நேரில் கோரிக்கை மனு அளித்தேன். மேலும், கடந்த 3 ஆண்டுகளாக ரயில்வே துறை மண்டல மேலாளா், கோட்ட ரயில்வே மேலாளா் ஆகியோரை பலமுறை சந்தித்து வலியுறுத்தினேன்.

இந்நிலையில், மன்னாா்குடி ரயில் நிலையத்திலிருந்து ஆக. 20- ஆம் தேதி முதல் சரக்கு ரயில் இயக்க மத்திய ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இதன்மூலம் நீடாமங்கலம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். மன்னாா்குடி ரயில் நிலையம் அருகில் மத்திய சேமிப்பு கிடங்கு இருப்பதால், உணவு தானியங்கள், விவசாய இடுப்பொருள்களை பெருமளவில் சேமித்து வைக்க முடியும். இதற்காக, மத்திய ரயில்வே அமைச்சகம் மற்றும் ரயில்வே துறைக்கு மன்னாா்குடி தொகுதி மக்கள் சாா்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com