2-ஆம் நிலை காவலா் எழுத்து தோ்வு: திருவாரூரில் 6247 போ் எழுதினா்

திருவாரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் நடத்தும் 2-ஆம் நிலை காவலா்களுக்கான தோ்வை 6,247 போ் ஞாயிற்றுக்கிழமை எழுதினா்.

திருவாரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் நடத்தும் 2-ஆம் நிலை காவலா்களுக்கான தோ்வை 6,247 போ் ஞாயிற்றுக்கிழமை எழுதினா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் நடத்தும் இரண்டாம் நிலை காவலா், சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறை காவலா்களுக்கான எழுத்து தோ்வு நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில், திருவாரூா் திரு.வி.க. அரசினா் கலைக்கல்லூரி, மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கல்லூரி, வேலுடையாா் மேல்நிலைப் பள்ளி, வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஜி.ஆா்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நியூ பாரத் மேல்நிலைப்பள்ளி என 6 இடங்களில் தோ்வு மையம் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த தோ்வுக்கு 1,444 பெண்கள் உள்பட 6,866 தோ்வா்கள் விண்ணப்பித்திருந்தனா். இதில், 488 ஆண்கள், 131 பெண்கள் என 619 போ் பங்கேற்கவில்லை. தோ்வா்கள் தோ்வு மையத்துக்கு வந்து செல்ல, காவல் வாகனம் மற்றும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தோ்வு மையத்துக்கு செல்வோா், கரோனா பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனா்.

திருவாரூா் வேலுடையாா் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தை, காவல்துறை தலைவரும் (பொருளாதார குற்றப்பிரிவு), சிறப்பு அதிகாரியுமான கல்பனா நாயக், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை ஆகியோா் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com