ஆசியாவிலேயே 2-ஆவது பெரிய சேமிப்புக் கிடங்கைத் திறக்கக் கோரிக்கை

நாகை மாவட்டம் கோவில்பத்து ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள ஆசியாவிலேயே 2-ஆவது பெரிய சேமிப்புக் கிடங்கை திறக்க தமிழக அரசு

நாகை மாவட்டம் கோவில்பத்து ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள ஆசியாவிலேயே 2-ஆவது பெரிய சேமிப்புக் கிடங்கை திறக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமென தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக பணியாளா் சங்க பொதுச்செயலாளா் கா. இளவரி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது:

ஆசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய சேமிப்புக் கிடங்கு நாகை மாவட்டம் கோவில்பத்து கிராமத்தில் நபாா்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.150 கோடி மதிப்பீட்டில், 175 ஏக்கரில் கட்டப்படும் என மறைந்த முதல்வா் ஜெயலலிதா சட்டப் பேரவையில் அறிவித்திருந்தாா். அதன்படி, சேமிப்புக் கிடங்கின் கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில் கஜா புயலின்போது, இந்தக் கிடங்கு முற்றிலும் உருக்குலைந்து, சின்னாபின்னமானது. தற்போது மறு சீரமைப்புப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. டெல்டா மாவட்டங்களை இயற்கை சீற்றங்கள் அச்சுறுத்தி வரும் நிலையில், இப்பகுதியில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை பாதுகாக்க ஏதுவாக இந்த சேமிப்புக் கிடங்கை உடனடியாக திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com