கனமழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வீடு கட்டித்தரக் கோரி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 15th December 2020 12:00 AM | Last Updated : 15th December 2020 12:00 AM | அ+அ அ- |

திருத்துறைப்பூண்டியில் கனமழையால் சேதமடைந்த காலனி வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித் தரக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருத்துறைப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏ கே. உலகநாதன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ கோ. பழனிச்சாமி, ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா், ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் எம். வையாபுரி, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பி.வி. சந்திரராமன், ஒன்றியச் செயலாளா் மணலிபாலு, நகர செயலாளா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 30,000 இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.