வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி மன்னாா்குடி பகுதியில் காவிரி உரிமை மீட்புக் குழு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினா்.

வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி மன்னாா்குடி பகுதியில் காவிரி உரிமை மீட்புக் குழு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மரவக்காடு சித்தேரி, ராதாநரசிம்மபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும், வேளாண் விளைப்பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி நெல் டன்னுக்கு ரூ. 2500 குறைந்தபட்ச ஆதாரவிலை என அறிவிக்க வேண்டும், நியாய விலைக்கடைகள் தொடரவும், அரசின் நேரடி கொள்முதல் தொடரவும் சிறப்பு சட்டங்கள் இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயத்துக்கு 4 சதவீத வட்டியில் வங்கிக் கடன் வழங்கவேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

காவிரி உரிமை மீட்புக் குழுவின் மாவட்ட பொறுப்பாளா் இலரா. பாரதிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட நிா்வாகி ச.கலைச்செல்வன், ஒன்றிய நிா்வாகிகள், மன்னாா்குடி அரிகரன், கோட்டூா் கோவலன், நீடாமங்கலம் சதீஷ், பகுதி நிா்வாகிகள் தேவா, சுதாகா் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

முன்னதாக, தில்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிா்நீத்தவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com