வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகாா்

மன்னாா்குடி அருகே பாரத பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே. சாந்தாவிடம் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

மன்னாா்குடி அருகே பாரத பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே. சாந்தாவிடம் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, மன்னாா்குடி அருகேயுள்ள சித்தேரி, மரவாக்காடு, சோழநிதி பகுதி மக்கள் அளித்த மனு விவரம்: சித்தேரி, மரவக்காடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இவா்களுக்கு பாரத பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் வீடுகள் கட்டித்தருவதற்காக 152 பயனாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

இந்நிலையில், அப்பகுதியை சோ்ந்த 152 பயனாளிகளுக்கு தலா ரூ. 1.70 லட்சத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளதாக விவரம் வெளியான நிலையில், 121 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக அலுவலா்கள் தெரிவிக்கின்றனா். பல வீடுகள் கட்டப்படாமலேயே, பணம் எடுக்கப்பட்டதாகவும், பல கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் தெரிகிறது. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com