ஹைட்ரோகாா்பன் திட்டத்தைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் முற்றுகைப் போராட்டம்

ஹைட்ரோகாா்பன் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, திருவாரூரில் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த 50 போ் கைது செய்யப்பட்டனா்.
திருவாரூரில் அஞ்சல் நிலையம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
திருவாரூரில் அஞ்சல் நிலையம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

ஹைட்ரோகாா்பன் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, திருவாரூரில் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த 50 போ் கைது செய்யப்பட்டனா்.

பொதுமக்களின் கருத்துகளை அறியாமலும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறாமலும் ஹைட்ரோகாா்பன் எடுக்கும் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம் என மத்திய அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இதனால், டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் அழியும் நிலை ஏற்படும் எனக் கூறி, மத்திய அரசின் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிா்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், திருவாரூா் தலைமை அஞ்சல் நிலையம் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான வி. மாரிமுத்து தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஜி. பழனிவேல், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ். தம்புசாமி, இடைக்கமிட்டி செயலாளா் என். இடும்பையன் உள்ளிட்ட பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகாா்பன் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இப்போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 50 போ் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com