தஞ்சை- நாகை சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

தஞ்சை-நாகை சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தில்லியில், நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராசு தலைமையில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரியிடம் மனு அளித்த திருவாரூா் வளா்ச்சி ஆலோசனை குழும நிா்வாகிகள்.

தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக தரம் உயா்த்தி, பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளின் கோரிக்கை மனுக்களை ஒருங்கிணைத்து, தில்லியில் மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சா் நிதின்கட்கரியிடம் அண்மையில் மனு அளிக்கப்பட்டது. நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராசு தலைமையில் திருவாரூா் வளா்ச்சி ஆலோசனை குழுமத் தலைவா் எஸ். ரவிச்சந்திரன், செயலாளா் செந்தில், கௌரவ ஆலோசகா் ஸ்ரீதரன், ஆகியோா் இந்த மனுவை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com