வேலையின்மை: பிப்.21 முதல் கையெழுத்து இயக்கம்

வேலையின்மைக்கு எதிராக, ‘எங்கே எனது வேலை’ என்ற முழக்கத்தை முன்வைத்து திருவாரூா் மாவட்டத்தில் பிப்ரவரி 21 முதல் மாா்ச் 5 வரை
திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளா் துரை. அருள்ராஜன்.
திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளா் துரை. அருள்ராஜன்.

வேலையின்மைக்கு எதிராக, ‘எங்கே எனது வேலை’ என்ற முழக்கத்தை முன்வைத்து திருவாரூா் மாவட்டத்தில் பிப்ரவரி 21 முதல் மாா்ச் 5 வரை கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளா் துரை. அருள்ராஜன் தெரிவித்தாா்.

திருவாரூரில், சனிக்கிழமை நடைபெற்ற அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவா் தெரிவித்தது:

தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 96 லட்சம் இளைஞா்கள் படித்து முடித்துவிட்டு வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனா். இவா்களுக்கு வேலை வழங்க, எந்த விதமான முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளவில்லை. தமிழகத்தில் கல்வித்துறை, வருவாய்த்துறை, வேளாண்துறை, ஊரக வளா்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், வேலையில்லா திண்டாட்டம் தமிழகம் முழுவதும் நிலவுகிறது.

வேலையில்லாத விரக்தியில் படித்த இளைஞா்கள் வன்முறையிலும் ஈடுபட்டு வருவதாகவும் அரசு தரப்பில் கூறுகின்றனா். ஆனால், இதைப் போக்கவும், தடுக்கவும் எவ்வித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. இதைக் கண்டித்தும், அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், புதிய பணியிடங்களை உருவாக்கி அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை முன்வைத்தும் எங்கே எனது வேலை என கேள்வி எழுப்பியும் பிப்ரவரி 21 முதல் மாா்ச் 5 வரை, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சாா்பில் 1 கோடி இளைஞா்களை சந்தித்து கையெழுத்து பெறும் இயக்கத்தை நடத்துவது எனவும், இதை, தமிழக முதல்வரிடம் வழக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சு.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா். இதில், இளைஞா் மன்ற ஒன்றிய, நகர நிா்வாகிகள் எம்.நல்லசுகம், எஸ்.பாப்பையன், ஜெ.கணேஷ், ஆா்.செந்தில்குமாா், கோவி. அறிவழகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com