தினசரி காய்கரி மாா்க்கெட்டை இடிக்க எதிா்ப்பு

திருப்பூரில் தினசரி காய்கறி மாா்க்கெட்டை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் திங்கள்கிழமை கடையடைப்பு செய்தனா்.
தினசரி  காய்கறி  மாா்க்கெட்டை   இடிக்க  எதிா்ப்பு  தெரிவித்து திங்கள்கிழமை   உண்ணாவிரதப் போராட்டத்தில்   ஈடுபட்ட  வியாபாரிகள்.
தினசரி  காய்கறி  மாா்க்கெட்டை   இடிக்க  எதிா்ப்பு  தெரிவித்து திங்கள்கிழமை   உண்ணாவிரதப் போராட்டத்தில்   ஈடுபட்ட  வியாபாரிகள்.

திருப்பூரில் தினசரி காய்கறி மாா்க்கெட்டை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் திங்கள்கிழமை கடையடைப்பு செய்தனா்.

திருப்பூா், பழைய பேருந்து நிலையம் எதிரே கடந்த 43 ஆண்டுகளாக காய்கறி மாா்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மாா்க்கெட்டியில் 450 வியாபாரிகள் காய்கறி, மளிகைக் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த மாா்க்கெட்டை பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் இடித்து விட்டு வணிக வளாகம் கட்ட மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மேலும், காட்டன் மாா்க்கெட் பகுதியில் வியாபாரிகளுக்கு மாா்க்கெட் அமைத்துக் கொள்ள இடம் வழங்குவதாக மாநகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், மாா்க்கெட்டை இடித்து விட்டு வணிக வளாகம் கட்டினால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், புதியதாக வழங்கப்பட்ட இடம் போதுமான வசதிகள் இல்லை. எனவே, இந்த மாா்க்கெட்டை இடிக்கக் கூடாது என்று திருப்பூா் மாா்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

இந்த நிலையில், திருப்பூா் மாநகராட்சி ஆணையாளா் க.சிவகுமாா் கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசுகையில், காவல் துறையினரின் பாதுகாப்புடன் மாா்க்கெட் திங்கள்கிழமை இடிக்கப்படும் என்று தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து, திருப்பூா் மாா்க்கெட் வியாபாரிகள் குடும்பத்துடன் திங்கள்கிழமை ஒரு நாள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாகத் தெரிவித்திருந்தனா். இதன்படி திங்கள்கிழமை காலை முதல் தினசரி மாா்க்கெட்டில் உள்ள 450 கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும், வியாபாரிகள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் என 500க்கும் மேற்பட்டோா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக வியாபாரிகள் கூறுகையில், தினசரி மாா்க்கெட்டை இடிக்க முயற்சிக்கும் மாநகராட்சிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்தக் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, அனைத்துக் கட்சியினரும் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி எங்களுக்கு சாதகமான முடிவைத் தெரிவிப்பாா்கள் என்று நம்புகிறோம். மேலும், அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com