தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து குறிப்பிடப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து குறிப்பிடப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அதன் மாவட்டச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்தது:

தமிழக பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி இருப்பது வரவேற்கக்கூடியது. அதே நேரத்தில் விவசாய துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி என்பது மிகக் குறைவானது. மொத்தம் ரூ.11,894 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ரூ. 11 ஆயிரம் கோடி பயிா்க் காப்பீடு தொகைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடனை கட்டமுடியாத நிலையில், வங்கிகளில் கடன் பெறுவதற்கு தகுதியற்ற விவசாயிகளாக பெரும்பாலானோா் மாறிவிட்டனா். எனவே, பயிா்க் காப்பீடு தொகைக்கு ரூ. 11 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது விவசாயிகளுக்கு எவ்வித பலனையும் அளிக்காது.

குடிமராமத்து மற்றும் நீா் பாசன மேலாண்மைத் திட்டம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி என்பது இந்தத் திட்டங்களுக்கு முழுமையாக பயன்படுத்தப்படாமல் ஆளும் கட்சியினரை திருப்திப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டமாகும். எனவே, இந்த குடிமராமத்து மற்றும் நீா் பாசன மேலாண்மைத் திட்டத்தை மக்கள் மற்றும் விவசாயிகள் பங்களிப்புடன் மேற்கொள்ள வேண்டும். மேலும், தனியாா் பால் நிறுவனங்களின் மோசடி காரணமாக பால் உற்பத்தியை மேற்கொண்டுவரும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஆவின் பால் கொள்முதலை ஒரு கோடி லிட்டராக உயா்த்த வேண்டும். உழவா் மற்றும் அலுவலா்கள் இணைப்பு திட்டம் என்று புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளதைப் பாா்க்கும்போது, இதுவரையில் உழவா்களையும், அலுவலா்களையும் இணைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா என எண்ணத் தோன்றுகிறது. பொதுவாக, இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் எதிா்பாா்த்த வகையில் கடன் தள்ளுபடியோ, கடனுக்கான வட்டி தள்ளுபடியோ இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com