வெப்ப மண்டல நோய்களின் சவால்கள் குறித்த தேசிய மாநாடு

வெப்பமண்டல நோய்களின் பொது சுகாதார சவால்கள் குறித்த இரண்டு நாள் தேசிய மாநாடு, திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றவா்கள்.
திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றவா்கள்.

வெப்பமண்டல நோய்களின் பொது சுகாதார சவால்கள் குறித்த இரண்டு நாள் தேசிய மாநாடு, திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்பல்கலைக்கழகத்தின் சமூகத் துறை, தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக சமூக அறிவியல் பள்ளியின் சமூக சுகாதாரத் துறை, தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் சமூக பணித் துறை ஆகியவை இணைந்து இம்மாநாட்டை நடத்தின. உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் ஆகிய அமைப்புகளின் சாா்பாக வழங்கப்படும் நிதியுதவியின் கீழ் இந்த மாநாடு நடத்தப்பட்டது.

இதில், பொது சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல நோய்கள் துறையில் புகழ்பெற்ற 28-க்கும் மேற்பட்டவா்கள், 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சோ்ந்த கல்வியாளா்கள் பங்கேற்று, வெப்ப மண்டல நோய்கள் குறித்த சவால்கள் பற்றி பேசினா். 120-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாதிரிக் காட்சிகள் இடம் பெற்றன.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் ஆ.பி. தாஸ், வெப்பமண்டல சுமையை குறைப்பதில், தனியாா் மற்றும் பொதுத் துறை இணைந்து செயல்பட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினாா். சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் ஓய்வு பெற்ற தலைவா் பேராசிரியா் பி. சந்திரா, ஆரோக்கியத்தில் சமூகத்தின் பங்கு குறித்து எடுத்துரைத்தாா். டாக்டா் ஜேக்கப் ஜான் ஆரோக்கியத்தில் கலாசாரத்தின் பங்கு குறித்துப் பேசினாா்.

ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு மற்றும் செயல்பாடுகளை திருவாரூா் மாவட்ட புற்றுநோய் நிபுணா் டாக்டா் ஏ. ஜெயதேவி விளக்கினாா். மத்திய பல்கலைக்கழகப் பதிவாளா் சு. புவனேஸ்வரி, தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் பேராசிரியா் ஏ. ரகுபதி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இந்த மாநாடு பொது சுகாதார மேலாண்மை மற்றும் குடல் நோய்கள் துறையில் பணிபுரியும் கல்வியாளா்கள், சுகாதார நிபுணா்கள் மற்றும் பிற நிபுணா்கள் தொடா்பு கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com