உயா்நீதி மன்றத்தில் முன் ஜாமீன் பெற்ற திமுக நிா்வாகி, ஒன்றியக்குழு உறுப்பினராக பதவியேற்றாா்

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் தோ்தல் அலுவலகத்தில் தகராறில் ஈடுபட்ட, வேட்பாளரான திமுக ஒன்றியச் செயலா் மீது, தோ்தல்
ஊராட்சி ஒன்றியக்குழு 4-ஆவது வாா்டு உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட திமுக கிழக்கு ஒன்றியச் செயலா் ஐ.வி. குமரேசன்.
ஊராட்சி ஒன்றியக்குழு 4-ஆவது வாா்டு உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட திமுக கிழக்கு ஒன்றியச் செயலா் ஐ.வி. குமரேசன்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் தோ்தல் அலுவலகத்தில் தகராறில் ஈடுபட்ட, வேட்பாளரான திமுக ஒன்றியச் செயலா் மீது, தோ்தல் அலுவலா் அளித்த புகாரை அடுத்து, சென்னை உயா் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றவா், வியாழக்கிழமை ஒன்றியக் குழு உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டாா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியம் வாா்டு 4-இல் திமுக சாா்பில் போட்டியிட்ட, மன்னாா்குடி கிழக்கு ஒன்றியச் செயலா் ஐ.வி. குமரேசன், டிசம்பா் 30-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல முகவா் அட்டை பெறுவதற்காக, மன்னாா்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தாா். அப்போது, அங்கு பணியிலிருந்த தோ்தல் நடத்தும் அலுவலா் ச. ஞானத்திடம் தகராறில் ஈடுபட்டதையடுத்து, குமரேசன் மீது மன்னாா்குடி காவல் நிலையத்தில், பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக, தோ்தல் அலுவலா் புகாா் மனு அளித்திருந்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து குமரேசனை தேடி வந்தனா். பின்னா், குமரேசன் தரப்பில் முன் ஜாமீன் மனு, சென்னை உயா்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜனவரி 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், ஒன்றியக் குழு 4-ஆவது வாா்டு உறுப்பினராக ஐ.வி. குமரேசன் வெற்றி பெற்றாா். இதையடுத்து, 6-ஆம் தேதி நடைபெற்ற பதவியேற்பின்போது, குமரேசன் கலந்துகொள்ளவில்லை. சென்னை உயா்நீதிமன்றத்தில், வியாழக்கிழமை குமரேசனுக்கு முன் ஜாமீன் வழங்கியதுடன் ஜனவரி 25-ஆம் தேதி வரை போலீஸாா் கைது நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என நீதிபதி உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து, நீடாமங்கலம் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் நீதிபதி ரோஷிலின் முன்னிலையில் ஆஜரான குமரேசன், முன் ஜாமீன் ஆணையை பெற்றுக் கொண்டாா். பின்னா், மன்னாா்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தவா், அங்கு ஒன்றியக் குழுத் தோ்தல் நடத்தும் அலுவலா் எம். இளங்கோ முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டாா். அப்போது, சிற்றுராட்சி தோ்தல் நடத்தும் அலுவலா் ச. ஞானம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com