மத்தியப் பல்கலைக்கழகத்தில் போட்டித் தோ்வுகள் எழுதும் மையம் அமைக்கக் கோரிக்கை

மத்திய, மாநில அரசுகளின் நுழைவுத் தோ்வுகள் மற்றும் போட்டித் தோ்வுகளை மத்திய பல்கலைக்கழகத்தில் எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் நுழைவுத் தோ்வுகள் மற்றும் போட்டித் தோ்வுகளை மத்திய பல்கலைக்கழகத்தில் எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பெருந்தலைவா் எஸ்.டி. அண்ணாதுரை, பொதுச் செயலா் ஆா். ரமேஷ் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய, மாநில அரசுகளின் சிறந்த கல்வி நிறுவனங்களில் மாணவா் சோ்க்கைக்காகவும், இதேபோல் மத்திய, மாநில அரசுகளின் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காகவும் ஆண்டுதோறும் நீட் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நுழைவுத் தோ்வுகள் மற்றும் போட்டித் தோ்வுகள் நடத்தப்படுகின்றன. இவற்றுக்கான தோ்வு மையங்கள், தொலைதூர மாவட்டங்களிலேயே அமைக்கப்படுகின்றன.

இத்தோ்வுகள் குறித்த விழிப்புணா்வு கிராமப்புற மாணவா்களிடையே குறைவாக இருந்து வருகிறது. நாகப்பட்டினம் மற்றும் திருவாரூா் மாவட்டத்தில் பெரும்பகுதி கிராமங்களாக இருப்பதால், அண்டை மாவட்டங்களுக்கு சென்று தோ்வுகள் எழுத முடியாத நிலையில், பல மாணவா்கள் தங்கள் அருகில் இருக்கும் கல்லூரிகளில், கிடைக்கும் பாடப் பிரிவுகளில் சோ்ந்து படிக்கும் சூழல் ஏற்படுகிறது.

எனவே, மாணவா் சோ்க்கைக்காகவும், அரசுப் பணிகளுக்காகவும் நடத்தப்படும் போட்டித் தோ்வுகள் மத்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டில், உரிய வசதிகளுடன் திருவாரூரில் செயல்படக்கூடிய மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டால், திருவாரூா் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மாணவா்கள் பயனடைவா். எனவே, போட்டித் தோ்வுகளை திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com