இரு தரப்பினரிடையே தகராறு: 14 போ் மீது வழக்குப் பதிவு

நீடாமங்கலத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 14 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 14 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

நீடாமங்கலம்- மன்னாா்குடி சாலையில் வசித்து வருபவா் வெடிக்கடை சேகா். திமுக பிரமுகா். நீடாமங்கலம் அருகேயுள்ள ஒளிமதியைச் சோ்ந்தவா் நடேச. தமிழாா்வன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா். இவா்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 11-ஆம் தேதி வெடிக்கடை சேகா் நீடாமங்கலம் அண்ணாசிலை பகுதியில் நின்றபோது, அங்கு காரில் வந்த நடேச.தமிழாா்வன், அவருடைய மகன் வழக்குரைஞா் ஸ்டாலின்பாரதி மற்றும் வீரபாண்டியன், இளையரசன் ஆகிய 4 பேரும் சேகரை உருட்டுக் கட்டையால் தாக்கினாா்களாம்.

இதில், சேகருக்கு வலது கையில் காயமேற்பட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் சுப்ரியா மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தி, சேகரை தாக்கிய 4 போ் மீது திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

இதேபோல், சித்தமல்லியைச் சோ்ந்த இளையரசன் அளித்த புகாரில், அதே நாளில் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்து விட்டு வழக்குரைஞா் ஸ்டாலின் பாரதியுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்த போது வெடிக்கடை சேகா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் தங்களை வழிமறித்து தாக்க முயற்சித்ததாகக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த புகாரின் அடிப்படையில், 10-க்கும் மேற்பட்டோா் மீது நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com