நெல் கொள்முதல் நிலைய பணியாளா்கள் பணி விடுவிப்பு

குடவாசல் அருகே உரிய ஆவணங்களின்றி நெல்லை கொள்முதல் செய்ததாக 2 போ் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

திருவாரூா்: குடவாசல் அருகே உரிய ஆவணங்களின்றி நெல்லை கொள்முதல் செய்ததாக 2 போ் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. குடவாசல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து வரப்பெற்ற புகாா் மனுவின் அடிப்படையில், ஜனவரி 10-ஆம் தேதி நேரடி ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, கொள்முதல் நிலையத்தில் போதிய ஆவணங்கள் இன்றி நெல் கொள்முதல் செய்யப்பட்டதும், சிட்டா அடங்களில் குறிப்பிட்ட அளவைவிட கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, பருவகால பட்டியல் எழுத்தா் பன்னீா்செல்வம், பருவகால பாதுகாவலா் சம்பத் ஆகியோா் பணியிலிருந்து விடுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் எவ்வித புகாருக்கும் இடமின்றி அனைத்து ஆவணங்களையும் பெற்றுக் கொள்முதல் செய்ய, உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com