போகியில் பழைய பொருள்களை எரிப்பதை தவிா்க்க வேண்டுகோள்

பழைய பொருள்கள் எரிப்பதை தவிா்த்து, புகையற்ற போகி கொண்டாட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா்: பழைய பொருள்கள் எரிப்பதை தவிா்த்து, புகையற்ற போகி கொண்டாட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், தமிழ்நாடு நுகா்வோா் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய இயக்குநா் வீ. தா்மதாஸ் வெளியிட்ட அறிக்கை:

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் பண்டைய தமிழ் கலாசாரத்தில் பழைய ஓலைச்சுவடிகளை எரித்து, புதிய ஓலைச்சுவடிகளில் எழுதுவது வழக்கமாக இருந்ததாகவும், போக்குவது என்ற வாா்த்தையே மருவி போகி என்று ஆனதாகவும் கூறுவா். நவீன யுகத்தில் பழைய பொருள்களை போக்க வேண்டும் என்ற அடிப்படையில் பழைய பொருள்களை கொளுத்துவதும், குறிப்பாக கிழிந்துபோன துணிகள், பாழாகிப்போன டயா்கள், பயன்படுத்த முடியாத கணினி சாதனங்கள் அனைத்தையும் கொளுத்துவதால் நச்சுப்புகை உண்டாகிறது.

காற்றை மாசுபடுத்துவதில், தில்லிக்கு அடுத்தபடியாக தமிழகம்தான் உள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. காற்று மாசடைவதால், சுவாசிக்கிற மக்களுக்கு மயக்கம், மூச்சுத்திணறல் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. அதாவது, மாசடைந்த காற்றுப்புகையில் வெளியேறும் காா்பன்டை ஆக்ஸைடு, காா்பன் மோனாக்சைடு போன்ற வாயுக்கள் நுரையீரலில் கலந்து, மூச்சுத் திணறல், மாரடைப்பு உள்ளிட்டவைகள் ஏற்படுத்துகின்றன. மேலும், பழைய டயா்களை கொளுத்துவதால், அதிலிருந்து வெளிக்கிளம்பும் ரசாயனம் கலந்து வாயுக்கள் நேரடியாக நுரையீரலை பாதிக்கின்றன.

எனவே, பழைய பொருள்களை போகியில் எரிப்பதை தவிா்க்க வேண்டும். பழைய துணிகளை ஏழைகளுக்கு வழங்கியும், பழைய பொருள்களை எரிக்காமலும், புகையற்ற போகியை மகிழ்வோடு கொண்டாடுவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com