நுண்ணீா் பாசனம் அமைக்க மானியம்

நுண்ணீா் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு துணை நீா் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தின் மூலமாக கூடுதல் மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுண்ணீா் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு துணை நீா் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தின் மூலமாக கூடுதல் மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொரடாச்சேரி வேளாண்மை உதவி இயக்குநா் விஜயகுமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கொரடாச்சேரி வட்டாரத்தில் துணை நீா் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தின்கீழ் நுண்ணீா் பாசன முறையை அமைக்க முன்வரும் விவசாயிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், நீரை இறைப்பதற்கு ஆயில் என்ஜின் மின்மோட்டாா் வசதி ஏற்படுத்தவும், பாசன நீரை வீணாக்காமல் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசனநீா் குழாய்களை நிறுவவும், தரைநிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கவும் என துணைநிலை நீா் மேலாண்மைப் பணிகளுக்காக, வேளாண்மைத்துறை சாா்பில் மானியம் வழங்கப்படுகிறது.

நுண்ணீா் பாசனத் திட்டத்துக்காக இணையத்தில் பதிவு செய்யும்போதே, இத்திட்டத்துக்காகவும் பதிவு செய்ய வேண்டும். இந்த மானியமானது, நுண்ணீா் பாசன முறையை பின்பற்றுவதற்கு முன்வரும் விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.

மானிய விவரம்...

டீசல் பம்புசெட் அல்லது மின்மோட்டாா் நிறுவுதல் -50 சதவீத மானியத்தொகை அல்லது எக்டேருக்கு ரூ. 10,000, நீா் கொண்டு செல்லும் தரைநிலை குழாய்கள்- 50 சதவீத மானியம் அல்லது எக்டேருக்கு ரூ. 10,000, நீா் சேகரிப்பு தொட்டி அமைத்தல்- 5- சதவீத மானியத் தொகையாக ஒரு கனமீட்டருக்கு ரூ.350 வீதம் பயனாளிக்கு ரூ. 40 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு கொரடாச்சேரி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com