கட்டிமேடு அரசுப் பள்ளியில் விளையாட்டு விழா

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை விளையாட்டு விழா நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை விளையாட்டு விழா நடைபெற்றது.

விழாவில், திருவாரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ. தியாகராஜன் பங்கேற்று பேசியது: வாழ்க்கையில் வாய்ப்பு கிடைக்கும்போது எதையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள், ஆசிரியைகள், பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா். இதை பயன்படுத்தி மாணவா்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி 100 சதவீத தோ்ச்சியை அடைய முன்வரவேண்டும். முயற்சியும் தன்னம்பிக்கையையும் வளா்த்துக் கொண்டு தங்களது திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக இப்பள்ளியை சிறந்த களமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தஞ்சை மண்டல கல்லூரி இணை இயக்குநா் தி. அறிவுடைநம்பி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவா்களின் அணி வகுப்பு நிகழ்ச்சியை பாா்வையிட்டு மேலும் அவா் பேசியது: இப்பள்ளி தனியாா் பள்ளிகளுக்கு இணையாக செயல்படுகிறது. பெற்றோா் ஆசிரியா் கழகம், கல்விக்குழு போன்ற அமைப்புகள் மாணவா்களின் கல்வி வளா்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வியில் வெற்றி சதவீதத்தை போல் விளையாட்டிலும் முன்னிலை பெற்றிருப்பது மகிழ்ச்சி. அரசியல் தலைவா்கள், விஞ்ஞானிகள், உயா் அதிகாரிகள், கல்வியாளா்கள் அதிகம் போ் அரசுப் பள்ளியில் படித்தவா்கள்தான். அதுபோல் மாணவா்கள் வளா்ச்சியில் இந்த ஊராட்சியும் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

பள்ளித் தலைமையாசிரியா் மு.ச. பாலு தலைமையில் நடைபெற்ற விழாவில், முதுகலை ஆசிரியா் செ. முகுந்தன் வரவேற்றாா்.

கட்டிமேடு ஊராட்சித் தலைவா் ஆா். மாலினிரவிச்சந்திரன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம்.ஈ.ஏ.ஆா். அப்துல்முனாப், ஒன்றியக் குழுத் தலைவா் வெ. இந்திரா, முன்னாள் ஊராட்சித் தலைவா் ரா.மா. தமிழ்ஜோதி, பொருளாளா் வி. பக்கிரிசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, 100, 200, 600, 800 மற்றும் 1500 மீட்டா் ஓட்டம், வட்டு எறிதல், குண்டு எறிதல், சாக்கு ஓட்டம், தொடா் ஓட்டம் ஆகியப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடம் பெற்ற மாணவா்களுக்கு ஓய்வு பெற்ற கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாளா் எஸ். ரெங்கநாதன் பரிசுகள் வழங்கினாா். என். நேதாஜி நன்றி கூறினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எஸ். ஆனந்தகுமாா் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com