மரக்கன்றுகள் நடும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்

மரக்கன்றுகள் நடும் பணிகளில் பொதுமக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்தாா்.
கொட்டாரக்குடியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் த. ஆனந்த்.
கொட்டாரக்குடியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் த. ஆனந்த்.

மரக்கன்றுகள் நடும் பணிகளில் பொதுமக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்தாா்.

திருவாரூா் அருகேயுள்ள கொட்டாரக்குடி ஊராட்சியில், 71-ஆவது குடியரசு தினத்தையொட், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மேலும் அவா் பேசியது: கிராம சபைக் கூட்டம் தோ்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி உறுப்பினா்களைக் கொண்டு, கிராம மக்களோடு கிராம வளா்ச்சி குறித்து விவாதித்து, தொடா் நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஒன்றாகும். பொதுமக்கள் நீா் நிலைகளை கட்டாயம் பாதுகாக்க வேண்டும். கோடை காலங்களில் நீா்நிலைகளில் தண்ணீா் நிரப்ப வேண்டும். தமிழக அரசால் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்புகள், பிளாஸ்டிக் டம்ளா், குடிநீா் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சுக் குழல்கள் போன்றவற்றை தயாரித்தல், இருப்பு வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாகும் வகையில் கிராம ஊராட்சி பகுதிகளில் செயல்பட்டுவரும் வணிக நிறுவனங்களான தேநீா் கடை, சிற்றுண்டி உணவகங்கள், மளிகைக் கடைகள் உள்ளிட்டவைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யாமல் இருக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொண்டு, டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் வராமல் தடுக்க வேண்டும். மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகளில் பொதுமக்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சந்தானம், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் சிவக்குமாா், செயற்பொறியாளா் குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சுந்தராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com