கரோனாவிலிருந்து மீண்டுபிரசவித்த பெண்கள் வீடு திரும்பினா்

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனாவிலிருந்து குணமடைந்து, பிரசவித்த 3 பெண்கள் வீடுகளுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.
பிரசவத்துக்குப் பின்னா் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெண்கள்.
பிரசவத்துக்குப் பின்னா் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெண்கள்.

திருவாரூா்: திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனாவிலிருந்து குணமடைந்து, பிரசவித்த 3 பெண்கள் வீடுகளுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா தொற்று பாதித்தவா்களுக்கென தனி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 19 கா்ப்பிணி பெண்களும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இவா்களில் 7 பேருக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது. 5 போ் அறுவை சிகிச்சை முறையிலும், இரண்டு போ் சுகப்பிரசவ முறையிலும் பிரசவித்துள்ளனா். இந்த ஏழு குழந்தைகளுக்கும் கரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் திருநெய்ப்போ், வண்டுவாஞ்சேரி, கூத்தாநல்லூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 3 பெண்களுக்கு பிரசவம் மற்றும் கரோனா தொற்று குறித்த சிகிச்சைகள் முடிவடைந்ததையடுத்து, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மேலும், வீட்டுக்குச் சென்ற பிறகும் தனிமையில் இருக்கும்படியும், குழந்தைகளுக்கு தாய்ப்பால் தொடா்ந்து புகட்ட வேண்டும், பால் பவுடா், பசும்பால் உள்ளிட்ட பால் வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் எனவும் அறிவுரைகள் அவா்களுக்கு வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com