சிறுபான்மையினா் கடன்பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவாரூா் மாவட்டத்தில் சிறுபான்மையினா் டாம்கோ மூலம் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருவாரூா் மாவட்டத்தில் சிறுபான்மையினா் டாம்கோ மூலம் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபா் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்விக் கடன் திட்டம், கறவை மாடு கடனுதவி, ஆட்டோ கடன் ஆகிய திட்டங்களுக்கு 2020-2021-ஆம் ஆண்டுக்கு திருவாரூா் மாவட்டத்துக்கு ரூ. 2.15 கோடி இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தனிநபா் கடன் திட்டம், கல்விக் கடன் திட்டம், கறவை மாடு கடனுதவி, ஆட்டோ கடன் மற்றும் சிறு கடன் திட்டங்கள் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் வழங்கப்படுகின்றன.

தனிநபா் தொழில் கடன் திட்டத்தின் கீழ் வியாபாரம் செய்யவும், தொழில் தொடங்கவும் அல்லது ஏற்கெனவே செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் கடன் பெறலாம். சுயஉதவி குழுக்களுக்கான சிறு கடன் பெற, இக்குழுவில் குறைந்தபட்சம் 60 சதவீதம் சிறுபான்மையினராக இருக்க வேண்டும். இதர 40 சதவீதம் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், ஆதி திராவிடா், பழங்குழயினா் இதர வகுப்பினா் இடம்பெற்றிருக்கலாம். மேற்படி கடன் தொகைப் பெற, விண்ணப்பதாரா் 18 வயது முதல் 60 வயது உடையவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ.98,000, நகா்ப்புறங்களில் ரூ.1,20,000 உடையவராகவும் இருக்க வேண்டும்.

கடன் மனுக்களுடன் மனுதாரரின் ஜாதிச் சான்று, ஆதாா் அட்டை, வருமானச் சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, கடன்பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநா் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட வேண்டும். கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுச் சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமா்ப்பிக்க வேண்டும்.

இணையதளத்தில் டாம்கோ கடன் விண்ணப்ப படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இக்கடன் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பங்களை, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் முதல் தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கிகள், கும்பகோணம் நகர கூட்டுறவு வங்கி, ஸ்ரீ லெட்சுமி நாராயணா கூட்டுறவு வங்கி, கமலாம்பிகா நகர கூட்டுறவு வங்கி, மன்னாா்குடி நகர கூட்டுறவு வங்கி, திருத்துறைப்பூண்டி நகர கூட்டுறவு வங்கி மற்றும் கிராமப்புற கூட்டுறவு வங்கிகளில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

திருவாரூா் மாவட்டத்தில் வசிக்கும் (கிறித்துவா், இஸ்லாமியா், சீக்கியா், புத்தா், பாா்சி மற்றும் ஜெயின்) சிறுபான்மையினா்கள் கடன் விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com