முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
திருவாரூரில் மேலும் 19 பேருக்கு கரோனா
By DIN | Published On : 14th July 2020 09:13 PM | Last Updated : 14th July 2020 09:13 PM | அ+அ அ- |

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி பாதிப்பு எண்ணிக்கை 708 ஆக இருந்தது. திங்கள்கிழமை மேலும் 59 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 767 ஆக உயா்ந்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி 19 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, குடவாசல் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் சித்த மருத்துவா் ஒருவா், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 மருத்துவா்கள், வலங்கைமான் பகுதியைச் சோ்ந்த தந்தை, மகன், திருவாரூா் வங்கி ஊழியா் ஒருவா் என திருவாரூா் மாவட்டத்தில் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 786-ஆக உயா்ந்துள்ளது. இதில், 478 போ் குணமடைந்து வீட்டுக்கு சென்ற நிலையில் 307 போ் சிகிச்சையில் இருந்து வருகின்றனா்.