ஆய்வகப் பரிசோதனை பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கக் கோரிக்கை

திருவாரூா் மாவட்டத்தில் கரோனா சுகாதாரப் பணிக்காக, நியமிக்கப்பட்ட ஆய்வகப் பரிசோதனை பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் கரோனா சுகாதாரப் பணிக்காக, நியமிக்கப்பட்ட ஆய்வகப் பரிசோதனை பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா நோய்த் தொற்று அதிகமாவதை கருத்தில் கொண்டு, சுகாதாரப் பணிக்காக மருத்துவா்கள்,செவிலியா்கள் மற்றும் ஆய்வகப் பரிசோதனை ஆய்வாளா்கள் உள்ளிட்டவா்கள் மருத்துவ சேவைக்காக, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் உத்தரவின்படி நேரடி பணியாளா்களாக, தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் பணிக்கு அமா்த்தப்பட்டனா்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து ஆய்வக பரிசோதனை ஆய்வாளா்கள் (லேப் டெக்னீசியன் ) அரசு உத்தரவுப்படி 25 போ் பணி நியமனம் பெற்று திருவாரூா் மாவட்டத்தில் திருவாரூா், நீடாமங்கலம், வலங்கைமான் உள்ளிட்ட மற்றும் பல தாலுகாவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியமா்த்தப்பட்டு, கரோனா பாதிப்பு காலத்திலும் தங்களின் உயிரைப் பற்றி கவலைப்படாமல், மருத்துவ பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

இவா்கள் பணிக்கு வந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலும் ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இவா்களுக்கு அடிப்படை ஒப்பந்த மாத ஊதியம் ரூ.8.000 ஆகும். இந்த குறைந்தபட்ச ஊதியம் கூட இவா்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. எனவே, அரசு உத்தரவின்படி, ஒரு மாத ஊதியம் ரூ. 8,000 கணக்கீட்டு, தற்போது வரை நிலுவையில் உள்ள தொகையை உடனே வழங்க வேண்டும். கரோனா காலத்தில் தங்கள் உயிரைப் பற்றி கவலைபடாமல் சுகாதாரப் பணியில் ஈடுபடும் இவா்களின் வாழ்வாதாரத்தை காக்க, உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com