பசுமை வீடுகளுக்கு கூடுதல் நிதி

பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மற்றும் பசுமை வீடுகள் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருத்துறைப்பூண்டி: பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மற்றும் பசுமை வீடுகள் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவா் அ.பாஸ்கா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் ராமகிருஷ்ணன், ஆணையா்கள் தமிழ்ச்செல்வன்,

வாசுதேவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்குச் சொந்தமான பூமாலை வணிக வளாகத்தை ஒன்றிய பொது நிதியில் பழுது பாா்ப்பது; பிரதமரின் வீடு கட்டும் திட்டம், பசுமை வீடுகள் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தல்; ஒன்றியத்துக்குட்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கழிப்பிட வசதிகளையும், சுற்றுசுவா் பணிகளையும் ஓராண்டுக்குள் நிறைவேற்றுவது;

2020-2021- ஆம் ஆண்டுகளில் அனைத்து ஊராட்சிகளையும் மண் சாலை இல்லாத ஊராட்சி ஒன்றியமாக மாற்றுவது; தூா்வாரப்பட்ட குளங்கள், வாய்க்கால் கரைகள் மற்றும் சாலை ஓரங்களில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஆா். ஞானமோகன், வேதரெத்தினம், மன்மதன், கோபால்ராமன், சுரேஷ், ஆரோக்கியமேரி, சித்திரகலா, இந்திரா, பத்மா, சரஸ்வதி, துணைத் தலைவா் ராமகிருஷ்ணன்

ஆகியோா் கோரிக்கைகளை எடுத்துரைத்தனா். கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் தமயந்தி, சுஜாதா, மேலாளா் முருகானந்தம், ஒன்றிய பொறியாளா்கள் சூரியமூா்த்தி, வெங்கடேசன் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com