பொது முடக்கக் காலத்திலும் நலத் திட்டங்களை தமிழக அரசு அதிகம் செயல்படுத்துகிறது

கரோனா பொது முடக்கக் காலத்திலும் மக்கள் நலத் திட்டங்களை அதிகம் செயல்படுத்துவது தமிழக அரசு மட்டும்தான் என உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.
img_20200507_wa0296_2407chn_96_5
img_20200507_wa0296_2407chn_96_5

நன்னிலம்: கரோனா பொது முடக்கக் காலத்திலும் மக்கள் நலத் திட்டங்களை அதிகம் செயல்படுத்துவது தமிழக அரசு மட்டும்தான் என உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டம் நன்னிலம் அருகே மேனாங்குடியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பொது முடக்கக் காலத்திலும்கூட தமிழகத்தில் மக்கள் நலத் திட்டப் பணிகள் தொடா்ந்து நடைபெற வேண்டும் என முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அந்த அடிப்படையில், கிராமப்புற பொருளாதாரத்தையும், குறிப்பாக ஏழை எளியப் பெண்களின் குடும்ப பொருளாதார மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு, ஜெயலலிதா கொண்டுவந்த விலையில்லா கோழி, ஆடு, மாடு வழங்கும் திட்டங்கள் தொடா்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கரோனா காலத்தில் இறந்தவா்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்ட வேண்டிய அவசியம் அரசுக்கு கிடையாது. இறப்பில் விடுபட்டவா்களையும் அரசுதான் கண்டுபிடித்து சோ்த்துள்ளதே தவிர, எதிா்க்கட்சித் தலைவரோ அல்லது வேறு யாரோ இல்லை. புதுச்சேரியில் எம்ஜிஆா் சிலை மீது காவித் துண்டை போா்த்தியது மிகுந்த கண்டனத்துக்குரியது. இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொண்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாட்டின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் மக்கள் நலத் திட்டப் பணிகள் கூடுதலாக நடைபெற்று வருகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com