ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 200 நாள்கள் பணி வழங்கக் கோரி, திருவாரூரில் விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா்.
திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா்.

திருவாரூா்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 200 நாள்கள் பணி வழங்கக் கோரி, திருவாரூரில் விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட வேலை நாள்களை 200 ஆக நீட்டித்து தினக்கூலியாக ரூ. 600 வழங்க வேண்டும். விவசாயத் தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ. 7,500 வழங்க வேண்டும். டிசம்பா் மாதம் வரையிலும் ரேஷன் பொருள்களை இலவசமாக வழங்க வேண்டும். கிராமப்புற மக்களை குறிப்பாக பெண்களை வதைக்கும் நுண்கடன்கள் வசூலிப்பை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூரில்...

வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். கலைமணி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் எஸ்.சேகா் முன்னிலை வகித்தாா். இதில், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.ராமசாமி, ஒன்றியச் செயலாளா் என்.இடும்பையன், நகரச் செயலாளா் எம். பாலசுப்ரமணியன், மூத்த தலைவா் பி.மாதவன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com