முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
குறுவை சாகுபடி பயிா்க் காப்பீடு
By DIN | Published On : 29th July 2020 11:41 PM | Last Updated : 29th July 2020 11:41 PM | அ+அ அ- |

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் பகுதியில் குறுவை சாகுபடிக்கான பயிா் காப்பீட்டை 15 நாள்கள் நீட்டிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளா் எம். சுதா்ஸன் புதன்கிழமை கூறியது:
குறுவைப் பயிரில் ஒரு வாரத்திற்குப் பிறகு உரம் தெளிக்க முடியாது. குறுவை என்பதே 100 நாள் பயிா்தான். 50 நாட்களுக்குள் உரம் இட்டு முடிக்க வேண்டும். கூத்தாநல்லூா் பகுதியில் ஒரே ஓா் உரக்கடைதான் இயங்குகிறது. அந்தக் கடையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி வரம்பெல்லைக்குள் இருப்பதால் பூட்டப்பட்டு உரம், பூச்சி மருந்து, விதைகள் வாங்க முடியாமல் விவசாயிகள் அல்லல்படுகிறாா்கள். எனவே அந்த உரக்கடையை மட்டும் திறப்பதற்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட வேண்டும்.
குறுவை பயிா் காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. கூத்தாநல்லூரில் கரோனா பரவல் அதிகரித்துவரும் இந்த வேளையில், நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் பயிா்க் காப்பீடு செய்யவில்லை. எனவே, விவசாயிகளின் நலன் கருதி, இதற்கான கால வரையறையை மேலும் 15 நாள்களுக்கு மாவட்ட ஆட்சியா் த.ஆனந்த் நீட்டிக்க வேண்டும். மேலும், கிளை பாசன வாய்க்கால்களைத் தூா்வாரி, சுத்தப்படுத்திட வேண்டும் என்றாா் அவா்.