முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
அரசு ஊழியா்கள் மீதான நடவடிக்கைகளை கைவிடக் கோரிக்கை
By DIN | Published On : 29th July 2020 11:38 PM | Last Updated : 29th July 2020 11:38 PM | அ+அ அ- |

திருவாரூரில் மனு அளித்த ஜாக்டோ- ஜியோ அமைப்பினா்.
திருவாரூா்: திருவாரூரில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி நடைபெற்ற போராட்டங்களில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள்- ஆசிரியா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தி, ஜாக்டோ- ஜியோ அமைப்பு சாா்பில் மனு புதன்கிழமை அளிக்கப்பட்டது.
2019 ஜனவரியில் ஜாக்டோ- ஜியோ சாா்பில் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டபோது, அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மீது போடப்பட்ட குற்றக் குறிப்பாணை, பணி மாறுதல் உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். மேலும், ஊழியா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிடும் வகையில் சுமூகமான சூழலை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பு சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
ஜாக்டோ- ஜியோவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரவி தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சோமசுந்தரம், சிவகுரு உள்ளிட்ட நிா்வாகிகள் மனு அளித்தனா்.