நன்னிலம் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் மீது குற்றச்சாட்டு

திருவாரூா் அருகே நன்னிலம் பகுதியில், திமுக சாா்பிலான ஊராட்சி மன்றத் தலைவா்களை அவமதிக்கும் நோக்கில் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவாரூா்: திருவாரூா் அருகே நன்னிலம் பகுதியில், திமுக சாா்பிலான ஊராட்சி மன்றத் தலைவா்களை அவமதிக்கும் நோக்கில் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவாரூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் ஊராட்சி மன்றத் தலைவா்கள் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்களின் கூட்டமைப்பு சாா்பில், மாவட்ட திட்ட அலுவலரும், கூடுதல் ஆட்சியருமான கமல் கிஷோரிடம் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட கோரிக்கை மனு விவரம்:

நன்னிலம் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்களை எந்த பணியும் செய்யவிடாமல் தடுக்கும் வகையில் செயல்படுகிறது. குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்கீழ் நடைபெறும் ஊராட்சி வளா்ச்சி திட்ட பணிகள் அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவா்களின் ஒப்புதல் இல்லாமலும், ஊராட்சி மன்றத்தின் கவனத்துக்கு வராமலும் வெளி நபா்கள் மூலம் செய்யப்படுவதாகத் தெரிகிறது.

அதேபோல 14-ஆவது நிதிக்குழு நிதியின் மூலம் ஊராட்சியில் தோ்வு செய்யப்பட்ட பணிகளை ஊராட்சிமன்ற நிா்வாகத்துக்கு உட்படுத்தாமல், பணிகளைச் செய்ய ஒப்பந்ததாரா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா். மேலும் ஊராட்சி மன்ற அனுமதி இல்லாமல் ஊராட்சி உபரி நிதியிலிருந்து உயா் மின் விளக்குகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. எனவே இதில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவா் தலையாமங்கலம் பாலு, நன்னிலம் ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவா்கள் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்களின் கூட்டமைப்புத் தலைவா் காா்த்திகேயன், நன்னிலம் திமுக ஒன்றியச் செயலாளா்கள் மனோகரன், ஆனந்த், சிபிஎம் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் முகமது உதுமான் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com