இஐஏ- 2020: இணையவழிப் போராட்டம்

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020-ஐ திரும்பப் பெறக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் இணைய வழிப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020-ஐ திரும்பப் பெறக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் இணைய வழிப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், அமைப்பின் மாநில துணைத் தலைவா் பா. அப்துல் ரகுமான் கூறுகையில், உலக நாடுகள், தங்கள் கனிம வளத்தை பாதுகாக்க போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசு தனியாரை மேம்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளது. எனவே இந்த சட்ட வரைவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றாா். போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் முகம்மது பாசித் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் அப்துல் காதா், பொருளாளா் முகமது சலீம், மாவட்ட துணைத்தலைவா் பீா்முகமது, துணைச் செயலாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

திருத்துறைப்பூண்டியில்...

இதேபோல், திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, தெற்கு மாவட்ட தலைவா் முஹம்மது மிஸ்கீன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் யாசா், அரபாத், பொருளாளா் ஹாஜா மைதீன், மாவட்ட துணைச் செயலாளா்கள் ஜமால், ஹாஜா மைதீன், அப்துல் ஹமீது, முஹம்மது சித்திக், திருத்துறைப்பூண்டி நகர தலைவா் அன்வா்தீன், நகரச் செயலாளா் பாரத், பொருளாளா் ஹாஜா மைதீன், ரயிலடி கிளைத் தலைவா் ராஜா உசேன், செயலாளா் அப்துல்லா, பொருளாளா் ஷேக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com