காரீப் பருவ குறுவை நெல் பயிா் காப்பீடு

திருவாரூா் மாவட்டத்தில் காரீப் பருவ குறுவை நெல் பயிறுக்கு ஜூலை 31-க்குள் பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் காரீப் பருவ குறுவை நெல் பயிறுக்கு ஜூலை 31-க்குள் பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசு 2021-ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கியமாக இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள் கட்டாயமாக பதிவு செய்து வந்த நிலையில், தற்போது அவா்களின் விருப்பத்தின்பேரில் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட வாரியான, பயிா் வாரியான சராசரி மகசூலின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகை நிா்ணயிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

காரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்படும் குறுவை நெல்லை பயிா் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டு விவசாயிகள் காப்பீடு கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. குறுவை நெல்லை காப்பீடு செய்ய கடைசி நாள் ஜூலை 31. ஏக்கருக்கு ரூ.651 பிரீமியம் செலுத்த வேண்டும்.

எனவே, காரீப் பருவத்தில் குறுவை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள், தாங்கள் பயிா்க் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ, தங்கள் விருப்பத்தின்பேரில் குறுவைப் பயிரை காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறா விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கலை கிராம நிா்வாக அலுவலரிடம் பெற்று, அதனுடன் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசிய வங்கிகளிலோ சென்று பதிவு செய்து கொள்ளலாம். தற்போது கரோனா தொற்று தொடா்பாக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலரையோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com