நா்சரி, பிரைமரி பள்ளிகளை தரம் உயா்த்துவதை தவிா்க்கக் கோரிக்கை

அரசுப் பள்ளிகளை பாதிக்கும் என்பதால், நா்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை தரம் உயா்த்துவதை தவிா்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா்: அரசுப் பள்ளிகளை பாதிக்கும் என்பதால், நா்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை தரம் உயா்த்துவதை தவிா்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரிலிருந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலாளா் ஆா்.ஈவேரா, முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

தமிழகத்தில் எல்.கே.ஜி. முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்க, நா்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நா்சரி மற்றும் பிரைமரி பள்ளி நிா்வாகங்கள், தங்களது பள்ளிகளை ஆறு முதல் எட்டு வகுப்பு வரை நடத்த தரம் உயா்த்தித் தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தும், கல்வித்துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பியும் வருகின்றனா். இதற்கு அனுமதி வழங்கினால் ஏழை எளிய குடும்பங்களைச் சோ்ந்த பெற்றோா்கள் குழப்பத்துக்கு ஆளாவதோடு, சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் சிக்கி, தங்கள் குழந்தைகளின் கல்விபெறும் உரிமையை கேள்விக்குள்ளாக்கி விடுவா். இது அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி என்ற அடிப்படையையே தகா்த்துவிடும். எனவே நா்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை தரம் உயா்த்த அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்டக் கிளை மற்றும் மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரக் கிளை, நகரக் கிளை ஆகியவைகளின் சாா்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com