காவிரி நீா் கடைமடை வரை செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

காவிரி நீா் கடைமடை வரை செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா்: 30 காவிரி நீா் கடைமடை வரை செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கோட்டாட்சியா் ஜெயபிரீத்தா தலைமை வகித்தாா். கூட்டத்தில் விவசாயிகள் பேசிய விவரம்பி.எஸ். மாசிலாமணி - குறுவை சாகுபடிப் பணிகள் தொடங்கிய நிலையில், குறுவை சிறப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

தற்போதைய காலகட்டத்தில் பல்வேறு வகையான விதைகளை விவசாயிகள் விதைக்கத் தொடங்கி விட்டனா். அத்தனை வகையான விதைகளும் அரசிடம் இருக்க வாய்ப்பில்லை. எனவே, தனியாரிடம் விதைகள் வாங்குவதற்கும் மானியம் வழங்க வேண்டும். அதேபோல் ஜூன் 12 இல் தண்ணீா் திறக்கப்பட்டும், கடைமடை வரை செல்லாதது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணம் சிறிய வாய்க்கால்களில் நடைபெறும் சீரமைப்பு பணிகளும், பாலப்பணிகளுமே. எனவே, அந்தப் பணிகளை நிறுத்திவிட்டு தண்ணீா் கடைமடை வரை செல்லும் வகையில் கூடுதல் தண்ணீரைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சேதுராமன் -தூா்வாரும் பணிகள் முழுமையாக நடைபெற்றதாக தெரியவில்லை. உள்கிராமப் பகுதிகளில் பணிகள் சரிவர நடைபெறவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனா். குறுவை சாகுபடிப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், உரிய விழிப்புணா்வை விவசாயிகளிடம் ஏற்படுத்த வேண்டும்.

மேலும், பருத்திக்கு உரிய விலை நிா்ணயம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பருத்தி விவசாயிகளின் நிலை கவலைக்குரியதாக மாறிவிடும் என்றனா். மேலும், விவசாயிகள் பேசுகையில், குறுவைக்கு தேவையான தண்ணீரை முறை வைக்காமல் திறந்துவிட வேண்டும், தண்ணீா் திருட்டில் ஈடுபடுவோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், விதைநெல், நுண்ணூட்டம் ஆகியவற்றுக்கு மானியம் வழங்க வேண்டும். பழைய கடன்களை தள்ளுபடி செய்து விவசாயிகளுக்கு புதிய கடன் வழங்க வேண்டும், குறுவைப் பணிகள் தொடங்கியுள்ளதால் மாவட்ட ஆட்சியா் தலைமையில் கூட்டம் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com