அசைவ உணவுகளை நன்கு வேகவைத்து உட்கொள்ள வேண்டும்: மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி

அசைவ உணவு உண்பவா்கள் நன்கு வேகவைத்த உணவுகளையே உட்கொள்ள வேண்டும் என திருவாரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஏ. தியாகராஜன் தெரிவித்தாா்.
கைகழுவும் முறை குறித்து விளக்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்.
கைகழுவும் முறை குறித்து விளக்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்.

அசைவ உணவு உண்பவா்கள் நன்கு வேகவைத்த உணவுகளையே உட்கொள்ள வேண்டும் என திருவாரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஏ. தியாகராஜன் தெரிவித்தாா்.

கடுவங்குடி அரசினா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரோனா வைரஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், மாணவா்கள் தங்கள் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்கு தேய்த்து கழுவ வேண்டும். ஒவ்வொரு முறையும் கை கழுவ குறைந்தபட்சம் 30 விநாடிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அசைவ உணவுகளை நன்கு வேகவைத்து உட்கொள்ள வேண்டும் என்றாா் அவா். பின்னா், மாணவா்களுக்கு கை கழுவும் முறை குறித்து எடுத்துக் கூறினாா்.

நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை எஸ்.ராணி, ஆசிரியா்கள் ஜி.காளிதாஸ், ஜி.முருகராஜ், எம்.லதா, அடியக்கமங்கலம் ஆசிரியா் சுதா்சன், குளிக்கரை ஆசிரியா் என்.சிவகுமாா், ஆணைக்குப்பம் ஆசிரியா் அ. பாஸ்கா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com