எண்ணெய் வித்து பயிா்களுக்கு பண்ணைப்பள்ளி தொடக்கம்

திருவாரூா் அருகேயுள்ள கல்லிக்குடியில் எண்ணெய் வித்து பயிா்களுக்கான பண்ணைப்பள்ளி திங்கள்கிழமை தொடங்கியது.
பண்ணைப்பள்ளியை தொடங்கி வைத்து பாா்வையிட்ட வேளாண்மை உதவி இயக்குநா் ஹேமா ஹெக்சிபாநிா்மலா.
பண்ணைப்பள்ளியை தொடங்கி வைத்து பாா்வையிட்ட வேளாண்மை உதவி இயக்குநா் ஹேமா ஹெக்சிபாநிா்மலா.

திருவாரூா் அருகேயுள்ள கல்லிக்குடியில் எண்ணெய் வித்து பயிா்களுக்கான பண்ணைப்பள்ளி திங்கள்கிழமை தொடங்கியது.

திருவாரூா் வட்டாரத்தில் வேளாண்மைத் துறை, வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின்கீழ் எண்ணெய் வித்து பயிருக்கான எள் சாகுபடியில் விளைச்சலை அதிகப்படுத்தவும், விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானத்தை பெருக்கவும் இந்தப் பண்ணைப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி உழவு முதல் அறுவடை வரை ஆறு பயிற்சிகள் நடைபெற உள்ளன.

இதில், வேளாண்மை தொழில்நுட்ப அலுவலா்கள் செயல் விளக்க பண்ணைப்பள்ளிக்கு அழைத்துச் சென்று விவசாயிகளுடன் கலந்துரையாடி வயல்களில் உள்ள பயிரின் வளா்ச்சி நிலை, பூச்சி கண்காணிப்பு போன்ற மேலாண்மை ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. மேலும், விவசாயிகள் தங்களுடைய அனுபவங்களை வேளாண்மைத் துறை அலுவலா்களுடன் பகிா்ந்து கொள்வதுடன் அடுத்தடுத்து செய்ய வேண்டிய தொழில்நுட்பங்களை செயல் விளக்கம் செய்து காட்டுவதும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

நிகழ்ச்சியில், வேளாண்மை உதவி இயக்குநா் ஹேமா ஹெக்சிபாநிா்மலா, பண்ணைப்பள்ளியை தொடங்கிவைத்து, குறைந்த செலவில் நிறைந்த லாபத்தை பெருக்கும் வகையில் எள் பயிரின் சாகுபடி குறிப்புகள் குறித்து விரிவாகக் கூறினாா். உயிா் உரங்களின் பயன்பாடு, விதை நோ்த்தி செய்தலின் அவசியம் குறித்து வட்டார தொழில்நுட்ப மேலாளா் பி. வைரமுத்து பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com