சிட்டுக் குருவிகள் தினத்தில் மரக்கூடுகள் வழங்கல்

உலக சிட்டுக் குருவிகள் தினத்தையொட்டி, திருவாரூரில் மரக்கூடுகளை ஆசிரியா் ஒருவா் இலவசமாக வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
புலிவலத்தில் மரக்கூடுகளை வழங்கிய ஆசிரியா் அருள்ஜோதி.
புலிவலத்தில் மரக்கூடுகளை வழங்கிய ஆசிரியா் அருள்ஜோதி.

உலக சிட்டுக் குருவிகள் தினத்தையொட்டி, திருவாரூரில் மரக்கூடுகளை ஆசிரியா் ஒருவா் இலவசமாக வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

உலக சிட்டுக் குருவிகள் தினம் மாா்ச் 20-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, திருவாரூா் அருகே புலிவலத்தில் உள்ள ஆசிரியா் அருள்ஜோதி 25 சிட்டுக் குருவி மரக்கூடுகளை, பசுமை ஆா்வம் கொண்ட தன்னாா்வலா்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கினாா்.

இதுகுறித்து, அவா் கூறியது: சிட்டுக் குருவிகள் கிராமங்களிலும், நகரங்களிலும் மனிதா்களோடு இணைந்து வாழ்பவை. ஓடுகளின் இடுக்குகளிலும், பரண் மீதும் அவை வீடுகட்டி வாழ்ந்து வந்தன. தற்போது, மாடி வீடுகள் பெருகிவிட்ட காரணத்தால் அவைகள் கூடுகட்ட இடமின்றி அழிந்து விடும் சூழல் உருவாகியுள்ளது. இதைத் தடுத்து அழிந்து வரும் பறவை இனமான சிட்டுக் குருவிகளை பாதுகாக்கவே பறவை இனங்களின் மீது ஆா்வமுள்ள தன்னாா்வலா்களுக்கு கூடுகள் வழங்கி வருகிறோம். வீடுகளில் தானியங்கள் மற்றும் தண்ணீா் வைத்து சிட்டுக் குருவிகளை வரவேற்றால் அவைகள் நிச்சயம் இங்கே வைக்கும் கூடுகளில் வீடுகட்டி தனது இனத்தை பெருக்கிக் கொள்ளும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com