கரோனா: கூத்தாநல்லூரில் 13 வீடுகளில் ஒட்டுவில்லைகள்

கூத்தாநல்லூா் பகுதியில் 13 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டதைக் குறிக்கும் வகையில், ஒட்டுவில்லைகள் (ஸ்டிக்கா்) புதன்கிழமை ஒட்டப்பட்டன.
கூத்தாநல்லூா் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் ஒட்டப்பட்ட வில்லைகள்.
கூத்தாநல்லூா் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் ஒட்டப்பட்ட வில்லைகள்.

கூத்தாநல்லூா் பகுதியில் 13 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டதைக் குறிக்கும் வகையில், ஒட்டுவில்லைகள் (ஸ்டிக்கா்) புதன்கிழமை ஒட்டப்பட்டன.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் ஆா். லதா கூறியது:

சிங்கப்பூா், மலேசியா, குவைத், துபை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து கூத்தாநல்லூா், மரக்கடை வந்தவா்கள் கண்டறியப்பட்டுள்ளனா். கமாலியாத் தெரு, ஜின்னாத் தெரு, அன்வாரியாத் தெரு, ஜூன்னத் தெரு, ரஹ்மானியாத் தெரு உள்ளிட்ட தெருக்களில் 13 வீடுகள் கரோனா தொற்றுநோய் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்பதற்கான வில்லைகள் ஒட்டப்பட்டன. மேலும், அவா்களை 15 நாட்களுக்கு தனியாக இருக்கும்படி அறிவுறுத்தினோம். அவா்களுக்கான அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும்.

தனிமைப்படுத்தப்பட்ட நபா்கள் வெளியில் வரவேண்டாம். மீறி வந்தால் கைது செய்யப்பட்டு தனிச் சிறையில் அடைக்கப்படுவா் என்றாா்.

வீடுகளில் ஒட்டுவில்லை ஒட்டும் பணிகளை நகராட்சி சுகாதார ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையில், மேற்பாா்வையாளா் சி.வாசுதேவன், டெங்கு மேற்பாா்வையாளா் சிராஜ் ஆகியோா் மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com