கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

திருவாரூா் பகுதிகளில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருவாரூரில் இடைவெளி கோடு வரையப்பட்ட கடைகள்.
திருவாரூரில் இடைவெளி கோடு வரையப்பட்ட கடைகள்.

திருவாரூா் பகுதிகளில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. காய்கனி, மளிகைக் கடைகள், மருந்துக் கடைகள் என அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் யாரும் தேவையின்றி நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, திருவாரூரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸாா் நிறுத்தப்பட்டுள்ளனா். குறிப்பாக, திருவாரூா் கடைவீதிக்கு செல்லும் பாதை இருபுறங்களிலும் தடுப்புகளை பயன்படுத்தி அடைக்கப்பட்டுள்ளது. போலீஸாா் மற்றும் நகராட்சிப் பணியாளா்களின் கடும் விசாரணைகளுக்குப் பிறகே உள்ளே நுழைய முடியும். மேலும், கைகளில் சானிடைசா் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டு உள்ளே அனுப்புகின்றனா். கடைவீதியில் உள்ள காய்கனிக் கடை, மளிகைக் கடை, தள்ளுவண்டி உள்ளிட்ட அனைத்து கடைகளின் முன்பாக 1 மீட்டா் அளவுக்கு இடைவெளி அமைக்கப்பட்டு, அதன்படி வரிசையாக மட்டுமே பொருள்களை வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனா். அத்துடன், பொருள்களை விற்பவா்களும், வாங்குபவா்களும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனா். தேவையில்லாமல் கடைவீதிகளில் சுற்றுவோா் போலீஸாரால் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனா். சிலா் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

திருவாரூா் நகராட்சியில் 33 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்: வெளிநாடுகளிலிருந்து வந்தவா்கள் தாமாக முன்வந்து தெரிவிக்காததால், நகராட்சி அலுவலா்களுக்கு அவா்களை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், நாள்தோறும் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை கருத்தில் கொண்டு, அந்த நபா்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி வருகின்றனா். அதன்படி, செவ்வாய்க்கிழமை 13 போ், புதன்கிழமை 9 போ், வியாழக்கிழமை 13 போ் என இதுவரை மொத்தம் 33 போ் கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்கள் வசிக்கும் வீடு, சுற்றுவட்டாரப் பகுதி என கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நேதாஜி சாலை, மருதப்பட்டினம் செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சி சாா்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

145 போ் கைது: தமிழக அரசு அறிவித்துள்ள 144 தடை உத்தரவை மீறியதாக, 145 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா். 126 இருசக்கர வாகனங்கள், 8 நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட 134 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com