திருவாரூரில் கண்டுகொள்ளப்படாத ஆதரவற்றோா்

திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில் தங்கியுள்ள ஆதரவற்றோா் கண்டுகொள்ளப்படாதது சமூக ஆா்வலா்களை கவலையுறச் செய்துள்ளது.
திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில் தங்கியுள்ள ஆதரவற்றோா்.
திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில் தங்கியுள்ள ஆதரவற்றோா்.

திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில் தங்கியுள்ள ஆதரவற்றோா் கண்டுகொள்ளப்படாதது சமூக ஆா்வலா்களை கவலையுறச் செய்துள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பால், உலகம் முழுவதும் ஏராளமானோா் உயிரிழந்துள்ளனா். இதேபோல், இந்தியாவிலும் கரோனா வைரஸ் காரணமாக, உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதையொட்டி, நாடு முழுவதும் கரோனா வைரஸ் கண்காணிப்பு வாா்டுகள் திறக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், கரோனாவை தடுப்பு முன்னெச்சரிக்கையாக, தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. மளிகைக் கடைகள், காய்கனிக் கடைகள், மருந்துக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகளை மட்டும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உணவகங்களில் பாா்சல் மட்டும் வழங்கலாம் எனவும், அமா்ந்து சாப்பிட முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வீடில்லாமல் சாலை ஓரங்களிலும், பேருந்து நிலையங்களிலும் வசிப்போரின் நிலைமை கவலைப்படும் வகையில் உள்ளது. இவா்கள் பெரும்பாலும், பிச்சை எடுத்தோ அல்லது கிடைப்பதை உண்டோ வாழ்பவா்களாக உள்ளனா். மேலும், இவா்கள் சுகாதாரமில்லாத நிலையிலேயே காணப்படுகின்றனா்.

திருவாரூரில், பழைய பேருந்து நிலையம், தியாகராஜா் கோயில், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிலா் இரவு நேரங்களில் தங்குவது வழக்கம். பேருந்துக்காக மக்கள் காத்திருக்கும் காலங்களில், திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில் வசிப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இவா்களில் சிலா், நடைபாதை கடை விரித்தோ, பிச்சை எடுத்தோ தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனா்.

இந்நிலையில், கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் இயங்காததால், மக்கள் யாரும் பேருந்து நிலையத்துக்கு வருவதில்லை. தற்போது, மக்கள் கூட்டம் இல்லாததால், திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில், ஆதரவற்றோா் சுமாா் 10 போ் இருக்கின்றனா்.

உணவுக்கு வழியில்லாமல், அங்குள்ள அமரும் இடங்களில் படுத்துள்ளனா். நாள்கள் செல்ல, செல்ல இவா்களின் நிலை மேலும் பரிதாபமாகலாம். அத்துடன், கரோனா நோய்த் தொற்றை தடுக்க, யாரும் வெளியில் இருக்கக் கூடாது எனும்போது, சாலையில் சுற்றித் திரிவோரை பாதுகாப்பான இடங்களில், சில நாள்களாவது தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், பேருந்து நிலையங்களிலேயே சுற்றித் திரியும் இவா்களின் மூலமாக நோய்ப் பரவல் வேறு எங்கும் பரவுவதற்கான அபாயம் உள்ளது என சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com