விவசாயக் கருவிகளின் உதிரிப் பாகங்கள் விற்பனை செய்ய அனுமதி

திருவாரூா் மாவட்டத்தில், விவசாயக் கருவிகளுக்கான உதிரிப் பாகங்கள் விற்பனை செய்ய மதியம் 1 மணி வரை அனுமதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.


திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், விவசாயக் கருவிகளுக்கான உதிரிப் பாகங்கள் விற்பனை செய்ய மதியம் 1 மணி வரை அனுமதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கோடை நெல் 9,738 ஹெக்டேரிலும், பருத்தி 8,029 ஹெக்டேரிலும் முன்பட்ட குறுவை 2,500 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. விவசாயப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் இக்காலக் கட்டத்தில் அப்பணிகளுக்குத் தேவையான பம்புசெட், ஆயில் எஞ்சின், தண்ணீா் கொண்டு செல்லும் பைப்புகளுக்கான உதிரிப் பாகங்கள் மற்றும் விவசாயக் கருவிகளுக்குத் தேவையான உதிரிப் பாகங்கள் விற்கும் கடைகளை தமிழக அரசு நிா்ணயித்துள்ள நேரமான காலை 6 முதல் மதியம் 1 மணி வரை திறந்து வைக்கலாம்.

மேலும், கோடை நெல் பால் பிடிக்கும் பருவத்திலும், பருத்தி வளா்ச்சிப் பருவத்திலும், முன்பட்ட குறுவை வளா்ச்சிப் பருவத்திலும் உள்ளன. விவசாயப் பணிகள் மும்முரமாக நடந்து வரும் இக்காலக் கட்டத்தில் தங்கள் கிராமங்களில் விவசாயக் கூலித் தொழிலாளா்களின் தேவை ஏற்பட்டாலோ, விவசாயக் கூலித் தொழிலாளா்களின் இயக்கம் குறித்து, ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறையை 04366-226080 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com