'கரோனாவிலிருந்து காத்துக்கொள்ள எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'

கரோனாவிலிருந்து காத்துக்கொள்ள எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தெரிவித்துள்ளார்.  
'கரோனாவிலிருந்து காத்துக்கொள்ள எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'

கரோனாவிலிருந்து காத்துக்கொள்ள எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தெரிவித்துள்ளார். 

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பெரியப் பள்ளி வாயில், தராவிஹ் ஹாலில் ஏழை, எளியோருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி, வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தலைமை வகித்தார். மன்னார்குடி கோட்டாட்சியர் புண்ணியக்கோட்டி முன்னிலை வகித்தார். பெரியப்பள்ளி வாயில் தலைவர் என்.எம்.ஏ.சிஹாபுதீன் வரவேற்றார். சமூக இடைவெளி விட்டு நடத்தப்பட்ட விழாவில், மாவட்ட காஜி ஏ.எஸ்.எம்.சர்தார் முஹ்யித்தீன், வட்டாட்சியர் தெய்வநாயகி, ஆணையர் லதா, சின்னப்பள்ளி வாயில் மன்ப உல் உலா சபைத் தலைவர் எல்.எம்.முஹம்மது அஷ்ரப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விழாவில், முடித் திருத்துவோர், புகைப்படக் கலைஞர்கள் உள்ளிட்ட 35 பேருக்கு, ரூ.2000 மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை, மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், இந்த கரோனா தொற்று ஊரடங்கு காலத்தில், கூத்தாநல்லூரிலிருந்து அனைவரும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்ததற்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில், பெரியப் பள்ளிவாயில் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா தொற்று நோய் உலகத்தையே புரட்டிப் போட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு காலரா ஏற்பட்டுள்ளது. அதைப் போல் இப்போது கரோனா தொற்று நோய் பரவியுள்ளது. 

இதற்கு முன்பு ஏற்பட்ட பேரிடர்களில் ஒரு பக்கம் பாதிப்பு ஏற்பட்டால், மறுபக்கத்தில் இருப்பவர்கள் உதவி செய்து கொள்வோம். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள கரோனா தொற்று உலகத்தையே புரட்டிப் போட்டு விட்டது. கரோனா தொற்று நோய்க்கு மருந்து கண்டுப்பிடிக்க 6 மாதம் ஆகலாம். ஒரு வருடம் ஆகலாம். 2 வருடங்கள் ஆகலாம். இன்னும் தாமதமாகலாம். ஏன், கண்டுப்பிடிக்கப்படாமலேயே இருக்கலாம். அதனால், அனைவரும் பாதுக்காப்பாக இருக்க வேண்டும். முகக்கவசம் கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும். கிருமி நாசினி போட்டு கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். நிச்சயமாக அனைவருக்குள்ளும் சமூக இடைவெளி இருக்க வேண்டும் என்றார்.

ஏற்பாடுகளை, செயலாளர் ஜே.எம்.ஏ.ஷேக் அப்துல் காதர் மற்றும் நிர்வாகிகள் கவனித்தனர். தொடர்ந்து, செயலாளர் ஷேக் அப்துல் காதர் பத்திரிகையாளர்களிடம் கூறியது. ஊரடங்கு அறிவித்தது முதல் பெரியப் பள்ளி வாயில் நிர்வாகத்தின் சார்பில், பல்வேறு உதவிகளை சுமார் ரூ.7 லட்சம் வரை ரொக்கமாக வழங்கியுள்ளோம். மேலும், கூத்தாநல்லூர் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள அனைத்து பள்ளி வாயில்கள், செல்வந்தர்கள், தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், சமுதாய அமைப்புகள் உள்ளிட்டோர் மூலமும் ரூ.ஒரு கோடிக்கும் மேலான உதவிகளை வழங்கப்பட்டுள்ளது. எந்த தருணத்திலும் மாவட்ட நிர்வாகத்துடன், கூத்தாநல்லூர் ஜமாஅத் இணைந்து செயல்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com