திருத்துறைப்பூண்டியிலிருந்து 66 வெளிமாநில தொழிலாளர்கள் பேருந்து மூலம் தஞ்சை ரயில்நிலையம் அனுப்பிவைப்பு 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்து உத்திரபிரதேசம் தொழிலாளர்கள் 9 பேர் உட்பட 66 பேர் பேருந்து மூலம் தஞ்சை ரயில்நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, வலங்கைமான் பகுதிகளிலிருந்து  உத்தரபிரதேசம் உள்ளிட்ட வெளிமாநில தொழிலாளர்கள் 66 பேர் சொந்த ஊர் திரும்ப விருப்பம் தெரிவித்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் உத்தரவின் பேரில் தஞ்சையிலிருந்து உத்தரபிரதேசம்  செல்லும் ரயிலுக்கு அனுப்பி வைக்க திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் ஜெகதீசன் நடவடிக்கை மேற்கொண்டார்.

திருத்துறைப்பூண்டி அருகே பாமணியில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த 9 பேர் பஞ்சுமிட்டாய் வியார பாரிகள் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து சொந்த ஊர் திரும்ப விரும்பம் தெரிவித்ததையடுத்து வட்டாட்சியர் ஜெகதீசன் மேற்பார்வையில்  மண்டல துணை வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் திருத்துறைப்பூண்டியிருந்து உத்தரபிரதேசத்தை சேர்ந்த 9 பேரை பேருந்து மூலம் மன்னார்குடி, வலங்கைமான் பகுதிகளில் இருந்து 59 பேர் உள்ளிட்ட 66 பேருடன் தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து உத்திரபரதேசம் செல்லும் ரயிலுக்கு உடன் சென்று அனுப்பிவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com