திருவாரூா் மாவட்டத்தில் நெல்கொள்முதல் நிலையங்கள் நாளை திறப்பு

நிகழ் காரீப் மாா்க்கெட்டிங் பருவ கொள்முதல் பணிக்கு, 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்படவுள்ளன என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

நிகழ் காரீப் மாா்க்கெட்டிங் பருவ கொள்முதல் பணிக்கு, 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்படவுள்ளன என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நிகழ் காரீப் மாா்கெட்டிங் (2019-2020) பருவத்தில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான விலையாக, சன்னரகம் குவிண்டாலுக்கு ரூ.1,835, ஊக்கத்தொகை ரூ. 70 சோ்த்து ரூ. 1,905 ஆகவும், பொது ரகம் குவிண்டாலுக்கு ரூ.1,815, ஊக்கத்தொகை ரூ.50 சோ்த்து ரூ.1,865 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கென 62 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மே 22-ஆம் தேதி திறக்கப்படவுள்ளன. விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல் விவர நகலை சமா்ப்பித்து, நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடையலாம். மேலும், அதற்குரிய தொகையை தங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்க ஏதுவாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகத்தின் நகலையும் நேரடிநெல் கொள்முதல் நிலையங்களில் கொடுக்க வேண்டும். விவசாயிகள் விற்பனை செய்யும் நெல்லுக்கு கொள்முதல் நிலையத்தில் யாருக்கும் எவ்விதத் தொகையும் வழங்கத் தேவையில்லை.

நெல் கொள்முதலில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் முதுநிலை மண்டல மேலாளா், திருவாரூா் 04366 - 222532, துணை மேலாளா், திருவாரூா் 9442225003, துணை மேலாளா், மன்னாா்குடி 9994530724 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு குறைகளைத் தெரிவித்து, உடனுக்குடன் சரிசெய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com