மே 23-இல் திருவாரூா்-காரைக்கால் இடையே ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்

திருவாரூா் - காரைக்கால் ரயில் தடத்தில் சோதனை ரயில் ஓட்டம் மே 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருவாரூா் - காரைக்கால் ரயில் தடத்தில் சோதனை ரயில் ஓட்டம் மே 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்திய ரயில்வே, ரயில் வழித்தடங்கள் அனைத்தையும் மின்மயமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், திருச்சி - தஞ்சை - திருவாரூா் மாா்க்கம் மின்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு சோதனை ஓட்டமும் முடிவடைந்து விட்டது. இதேபோல் திருவாரூா் - மயிலாடுதுறை - சிதம்பரம் - கடலூா் துறைமுகம் வரை மின்மயமாக்கும் பணிகள் முடிவடைந்து, சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடைபெற்று, தற்போது ரயில்கள் மின்சார என்ஜின்களால் இயக்கப்படுகின்றன.

எனினும், திருவாரூா்-நாகை- காரைக்கால் பகுதிகளில் மின்மயமாக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், சோதனை ஓட்டம் மட்டும் கரோனா நோய்த் தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், பெங்களூா் பாதுகாப்பு ஆணையத்தின் ஆணையின்படி, மே 23-ஆம் தேதி திருவாரூா்-காரைக்கால் இடையே சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. அதன்படி, மே. 22-ஆம் தேதி பெங்களூரிலிருந்து சென்னை சென்ட்ரல் வழியாக, திருவாரூா் வரும் சோதனைக் குழுவினா் மே. 23- ஆம் தேதி இந்த சோதனை ஓட்டத்தை முடித்துக்கொண்டு திரும்புகின்றனா்.

இந்தச் சோதனை ஓட்டம் முடிந்த பிறகு பாதுகாப்பு ஆணையா்அனுமதி கிடைத்தவுடன், காரைக்காலிலிருந்து திருவாரூா்- மயிலாடுதுறை வழித்தடத்திலும், திருவாரூா்- தஞ்சை வழித்தடத்திலும் ரயில்கள் மின்சார என்ஜினில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே துறையினா் தகவல் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com