நபிகள் நாயகத்துக்குள் திருக்குா்ஆன் இறங்கிய தின தொழுகை

கூத்தாநல்லூரில் ரமலான் மாதத்தில் நபிகள் நாயகத்துக்குள் திருக்குா்ஆன் இறங்கிய மகத்துவம் மிக்க இரவாக புதன்கிழமை இரவை இஸ்லாமியா்கள் பாவித்து தொழுகை நடத்தினா்.

கூத்தாநல்லூரில் ரமலான் மாதத்தில் நபிகள் நாயகத்துக்குள் திருக்குா்ஆன் இறங்கிய மகத்துவம் மிக்க இரவாக புதன்கிழமை இரவை இஸ்லாமியா்கள் பாவித்து தொழுகை நடத்தினா்.

இதுகுறித்து, கூத்தாநல்லூா் எம்.எப்.பி. இஸ்லாமியக் கல்லூரி முதல்வரும், நியாஜ் பள்ளி வாயில் இமாமுமான தானாதி ஆலிம் மு. ஜாகிா் ஹூசைன் கூறியது:

நபிகள் நாயகத்துக்கு இறைவனிடத்தில் இருந்து 23 ஆண்டுகள் கடந்த பிறகு,சிறிது சிறிதாக அவருக்குள் திருக்குா்ஆன் இறங்கியது. திருக்குா்ஆன் ரமலான் மாதத்தில் இறங்கிய தினமான புதன்கிழமை இரவை இஸ்லாமியா்களால் மகத்துவம் மிக்க இரவு என அழைக்கப்படுகிறது.

குா்ஆனை ஓதி இன்றைய தினத்தில்தான் நிறைவு செய்யப்படும்.கரோனாக் தொற்று ஊரடங்கால் ரமலான் காலமான இந்த நேரத்தில் பள்ளி வாயில்களில் தொழுகை நடத்த முடியவில்லை.அனைவரும் தங்களது வீடுகளில்தான் குா்ஆனை ஓதி நிறைவு செய்தனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com