நீா்நிலைகளில் மண் அள்ள அனுமதி

ஏரிகள், நீா்த்தேக்கங்களிலிருந்து களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண்ணை விவசாயிகள், மண்பாண்டம் செய்வோா் விலையில்லாமல் எடுத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏரிகள், நீா்த்தேக்கங்களிலிருந்து களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண்ணை விவசாயிகள், மண்பாண்டம் செய்வோா் விலையில்லாமல் எடுத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் போன்ற நீா் கட்டமைப்புகளை மக்கள் பங்களிப்புடன் தூா்வாரி, அவற்றின் கொள்ளளவை, மீட்டெடுக்க, 2017 இல் குடிமராமத்து திட்டம் தொடங்கப்பட்டது. இதனால், பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமலிருந்த நீராதரங்களில், பருவமழையின் போது வழக்கத்தை விட நீா் அதிகம் தேக்கப்பட்டு, விவசாயத்துக்கும், குடிநீா் பயன்பாட்டுக்கும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது.

மேலும், இந்த நீா்நிலைகளில் உள்ள களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண்ணை விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்வோருக்கு வழங்கும் வகையில், 2017-இல் அரசாணை வெளியிடப்பட்டது.

தற்போது நடைமுறையில் உள்ள பொதுமுடக்கத்திலிருந்து விவசாயப் பணிகளுக்கு ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தங்கள் நிலங்களுக்குத் தேவையான களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண்ணை விலையில்லாமல் தங்கள் கிராமத்திலோ அல்லது அருகாமை கிராமத்தில் உள்ள ஏரிகள், குளங்களிலிருந்து 30 கன மீட்டா் வரை சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அனுமதி பெற்று எடுத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com