சிறப்பு மருத்துவ முகாமில், கட்டாயம் முகக்கவசம் அணிய திருவாரூர் ஆட்சியர் அறிவுரை

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சி சார்பில் நடைபெற்ற கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்கான சிறப்பு மருத்துவ முகாமில், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என
சிறப்பு மருத்துவ முகாமில், கட்டாயம் முகக்கவசம் அணிய திருவாரூர் ஆட்சியர் அறிவுரை

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சி சார்பில் நடைபெற்ற கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்கான சிறப்பு மருத்துவ முகாமில், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த .ஆனந்த்  சனிக்கிழமை பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார். 

கூத்தாநல்லூர் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், நகராட்சி ஆணையர் லதா, பொறியாளர் ராஜகோபால் ஆகியோரது ஏற்பாட்டின் பேரில், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகாக, அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமிற்கு, மன்னார்குடி கோட்டாட்சியர் புண்ணியக்கோட்டி தலைமை வகித்தார். பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். சுகாதாரத் துறை இணை இயக்குனர் ராஜமூர்த்தி வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த், மருத்துவ முகாமை தொடங்கி வைக்கும் முன் பேசியது, கரோனா  தொற்று வந்துள்ள இந்த காலத்தில், அதிகாரிகளாகிய எங்களை விட, கடை உரிமையாளர்களை விட களப்பணியாளர்கள் தான் மிகுந்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

தூய்மைப் பணியாளர்களாகிய களப்பணியாளர்கள் தான் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் கையில் அடையாள அச்சு வைப்பது, வீட்டில் நோட்டீஸ் ஒட்டுவது, வீட்டின் பகுதியில் கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் அதிகமாக செய்வது நீங்கள்தான். உங்கள் பணிகள்தான் அதிகம். உலகெங்கும் கரோனா தாக்கம் இருந்தாலும், எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக இல்லை. அரசு முகக்கவசம், கையுறை உள்ளிட்டவைகள் கொடுத்தாலும் நீங்கள் தான் பாதுக்காப்பாக இருக்க வேண்டும். மாவட்டம் முழுக்க 5,200 தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

தூய்மைப்பணியாளர்களில் வயதானவர்கள் அதிகம் உள்ளார்கள். வயது ஆக, ஆக கரோனாவின் பாதிப்பும் அதிகம் இருக்கும். நோயின் தாக்கம் தமிழகத்தில் குறைவாகத்தான் உள்ளது. இன்னும் நாம் பாதுக்காப்பாக இருக்க வேண்டும். தனி மனித பாதுக்காப்பு தான் கட்டாயம் அவசியம். இதுதான் பாதுக்காப்பானது. வெளியில் வரும் போது குடி தண்ணீர் கொண்டு வர வேண்டும். அல்லது வைட்டமின் சி சத்துக் கொண்ட எலுமிச்சை பழத்தின் ஜீஸ் குடிக்கவும். தண்ணீர் அதிக அளவில் குடிக்க வேண்டும். நமது உடலை நாம்தான் பாதுக்காத்துக் கொள்ள வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். கரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுக்காக்கும் பங்கு முகக்கவசத்திற்கு அதிகம் உண்டு. 

பல இடங்களில் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருகிறார்கள். இது தவறானது. கட்டாயம் மூகக்கவசம் அணிய வேண்டும். நமக்கு வராது என யாரும் நினைக்கக் கூடாது. கிருமிநாசினி அல்லது சோப்பைப் பயன்படுத்தி யாவது கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும். தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். எல்லா ஆட்டோக்களிலும்  சானிடைசர் வைத்திருக்க வேண்டும். மற்றவர்களை குறை சொல்வதை விட்டு விட்டு, நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இந்த மாற்றம் நம்முடைய அன்றாட பழக்க, வழக்கமாக கட்டாயம் மாற்றிக் கொள்ள வேண்டும். சின்ன சின்ன விஷயங்களில் இருந்து நாம் பழக்கப் படுத்திக் கொண்டு, நோய் தொற்றிலிருந்து பாதுக்காத்துக்  கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார்.நிகழ்ச்சியில், வட்டாட்சியர் தெய்வநாயகி, தலைமை மருத்துவர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

காலையில் 8 மணிக்கு தொடங்கிய மருத்துவ முகாமில், தூய்மைப் பணியாளர்கள், நகராட்சி பணியாளர்கள், வட்டாட்சிய அலுவலகப் பணியாளர்கள், காவல் துறையினர், அம்மா உணவக ஊழியர்கள் உள்ளிட்ட 300 பேருக்கு, வட்டார மருத்துவ அலுவலர்கள் ஆனந்தன், அபுவ தமிழன், தோல் நோய் மருத்துவர்  மகேஸ், பொது நல மருத்துவர் பிரேம்குமார், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் கல்பனா மற்றும் 20 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கொண்ட மருத்துவக் குழுவினர்கள் பரிசோதனை செய்து, அறிவுரைகள் வழங்கினர்.நிகழ்ச்சியை, ஏ.பி.ஆர்.ஓ., கார்த்தி தொகுத்து வழங்கினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை, நகராட்சி சுகாதார ஆய்வாளர் அருண்குமார், தலைமைச் செவிலியர் பத்மினி உள்ளிட்ட ஊழியர்கள் கவனித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com