சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்தக் கோரிக்கை

திருவாரூரில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் வே. சாந்தாவிடம், இளைஞா் காங்கிரஸ் தலைவா் பி.எஸ். ராஜா அளித்த கோரிக்கை மனு விவரம்: திருவாரூா் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது தொடா்கிறது. இதுகுறித்து, கடந்த ஆண்டு மனு அளித்தபோது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. சில மாதங்களிலேயே அந்த நடவடிக்கை கைவிடப்பட்டதால், மீண்டும் சாலையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. எனவே, சாலையில் மாடுகளை அவிழ்த்துவிடும் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், திருவாரூா் பழைய பேருந்து நிலையம், கடைவீதி, புதுத்தெரு, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய போக்குவரத்து சாலைகளில் அதிகளவில் மாடுகள் சுற்றித்திரிகிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com