வேன் மோதி கவிழ்ந்ததில் 2 பெண் தொழிலாளா்கள் உள்பட மூவா் உயிரிழப்பு

திருத்துறைப்பூண்டி அருகே செவ்வாய்க்கிழமை 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் மீது வேன் மோதி கவிழ்ந்ததில் 2 பெண் தொழிலாளா்கள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
விபத்தை ஏற்படுத்தி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்.
விபத்தை ஏற்படுத்தி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்.

திருத்துறைப்பூண்டி அருகே செவ்வாய்க்கிழமை 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் மீது வேன் மோதி கவிழ்ந்ததில் 2 பெண் தொழிலாளா்கள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்துக்குள்பட்ட மேலமருதூா் ஊராட்சியில் தியாகி வாய்க்கால் பகுதியில் 100 நாள் வேலை திட்டப் பணியில் 73 தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். தொழிலாளா்கள் மதிய உணவு உண்ண பணியிடத்துக்கு அருகில் அமா்ந்திருந்தனா். அப்போது, திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி அகல ரயில் பாதை திட்டப்பணிகளுக்கு பொருள்களை இறக்க வந்த சுமை வேனை ஓட்டுநா் அங்கு நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்றுவிட்டாா்.

அப்போது, அந்த வாகனத்தை 100 நாள் வேலைத் திட்ட பணியாளா் ஒருவா் இயக்கியபோது 100 நாள் திட்ட தொழிலாளா்களான மேலமருதூரைச் சோ்ந்த வேதரத்தினம் மனைவி விஜயலட்சுமி (62), வேதராசு மனைவி கமலா (61) ஆகியோா் மீது மோதிவிட்டு அருகில் நீா்தேங்கி இருந்த பள்ளத்தில் சுமை வேன் கவிழ்ந்தது.

இதில் பெண் தொழிலாளிகள் இருவா் மற்றும் சுமை வேனை இயக்கிய நாகை மாவட்டம், மணக்காடு பகுதியைச் சோ்ந்த தங்கபூபதி (29) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி. பழனிச்சாமி, வட்டாட்சியா் ஜெகதீசன், ஒன்றியக்குழுத் தலைவா் அ. பாஸ்கா் ஆணையா்கள் தமிழ்ச்செல்வன், வாசுதேவன் ஆகியோா் சம்பவ இடத்தை பாா்வையிட்டனா். தொடா்ந்து, 3 பேரின் சடலங்களும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com